Posts

எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் (அப்பா) வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு,எனது முதல் நூல், பாராட்டை பெற்ற போது அருகில் முனைவர் ச.குமரன் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் மு.துரைராஜ் அவர்களுடன்....

Image

15 சவுரன்

15 சவுரன்                                   அ.  நலவேந்தன் 
கிள்ளான் பெரிய மருத்துவமனை.மகளிர் பகுதியில்...“மதி...உனக்கு இன்னும் அந்த நம்பிக்க இருக்கா....”சற்று தயக்கத்துடன் அருகில் அமர்ந்து கொண்டே கேட்டார் சரவணன்.“ஏங்க அப்பிடி கேக்கிறீங்க...”பதற்றத்துடன் வளர்மதி.“வருன் பிறந்து இரண்டு வருசம் ஆச்சு...இன்னும் என்னாலே எப்படி நப்ப முடியும்....அப்பவே அந்த  நம்பிக்கை செத்துப்போச்சு..”“அப்படி சொல்லாதீங்க  எனக்கு  வேதனாயா  இருக்கு...!”“மதி நான் ஒன்னு கேக்கிறேன்..”“சொல்லுங்க...”“நான் உன் வாழ்கைய அழிச்சுட்டேன்ல...என்ன தயவுசெய்து மன்னிச்சுரு...”வளர்மதியால் பேசமுடியவில்லை,மாறாக கண்களில் கண்ணீர்தான் கொப்பளித்தது.
சோகம்..... அவள் உடல் இளைத்திருந்தாள்.சரியாகச் சாப்பிடாமல் உறங்காமல் இருந்ததனால் ஒரு மாலைப்பொழுது மயங்கிவிழ...... தற்போது கிள்ளான் பெரிய மருத்துவமனையில்.....! "வளர்மதி...... உங்களுக்கு உடல் ரீதியா எந்தப் பிரச்சனையும் இல்ல.......! ஆனா.....,உங்க மனசுக்குதான் ஏதோ ஒன்னு.....இட்ஸ் ஒகே...எங்க மருத்துவ மனையில......பிரத்தியேகமா மனோவியல் டாக்டர்கள் இருக்காங்க....இன்னைக்கி நீங்க ஓய்வு எடுத்து…

மகராசி

மகராசி      அரு.நலவேந்தன்      தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின்   பரிசு பெற்றது - 2015

கைதட்டலின் ஓசை மெல்ல அடங்க....ஆச்சியம்மாள் ஒலிப்பெருக்கி முன்.... “ஒத்த ஆளா... இதுங்கள நீ எப்படிக் கரசேர்க்கப் போறே...?” “இந்தக் கேள்வி.... என் காதில் கேட்காத நாளில்ல.....!” “ஒரு காலத்துலே  ஆயர்கூனீங் தோட்டத்துல மீசக்காரர்னு சொன்னாலே பெரியக் கிராணியே மிரலுவாரு...! என்னை எப்படியோ அவருக்குக் கட்டிவெச்சுட்டாங்க.....! அந்த நிமிசத்துல இருந்து என்னோட சுதந்திரம், சந்தோசம் எல்லாம் பறிபோயிடுச்சு.....! தினம் இரவான குடிச்சுட்டு வந்து வீட்டையே அதம் பண்ணுவாரு.....! நான் பட்டப் பாடு எனக்கும் அந்த மகமாயிக்கு மட்டும் தான் தெரியும்! யாரு கொள்ளிக் கண்ணு  பட்டதோ..... காலையிலே லாரிய எடுத்துட்டுப் போனவரு....! இரவு என்ன பெரிய ஆஸ்பித்திரிலே  நிர்கதியா நிக்க வெச்சுசுட்டாரு.......! டாக்டர்களும்  கை விரிச்சுட்டாங்க.....! எல்லாம்  முடிஞ்சு, மஞ்சள் குங்குமத்தோட இருந்த என்ன வெள்ள சீலைய உடுத்த வெச்சுட்டு நிம்மதியா போயிட்டாரு......! எத்தனை நாள்தான் சொந்தங்கள் கூட இருந்துட்டு அழும்....?என் அம்மாதான் கண்மூடற வரைக்கும் என் பத்துப்பிள்ள…
Image
நானும் எழுத்தாளர் திரு.வெங்கடேஷ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்........

சாபம்

சிறுகதை:       சாபம்                                        அரு.நலவேந்தன் “செல்வி......தமிழரசனை எந்தப் பள்ளியில சேர்க்கப் போறீங்க......?” “இன்னும் எதுவுமே முடிவுப் பண்ணலே....டீச்சர்..” “என்ன.......இவ்வளவு அலட்சியமா சொல்றீங்க? ” “மன்னிச்சிடுங்க டீச்சர்......நான் உங்களுக்குச் சீக்கிரமே பதில் சொல்லிடுறேன்...” “ஒகே,ஆனா......லேட் பண்ணிடாதிங்க! அப்புறம் உங்களுக்குதான் பிரச்சினை...” “நீங்கச் சொல்றது உண்மைதான் டீச்சர்.....” “தமிழரசன் சீனப்பள்ளிக்குப் போறதா சொல்றாரு...?” “அப்படி எல்லாம் இல்லைங்க டீச்சர்...” “பார்த்தும்மா.....நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க செல்வி.நாம் எடுக்கும் தப்பான முடிவால எதிர்காலத்தில தமிழ்ப்பள்ளிகளையே மூடிடக்கூடாதில்ல......?” பாலர் பள்ளி ஆசிரியர்  திருமதி.அஞ்சலையின் சொல் செல்விக்குள் ஆலய மணியைப் போல் ஒலித்துக்கொண்டு இருந்தது.  தமிழரசன் கணினியில் கேளிக்கை விளையாட்டில் மூழ்கியிருந்தான்.செல்வி தொலைக்காட்சி நாடகத்தில் இலயித்திருந்தாள்.மோட்டார் வண்டியின் மஞ்சள் விளக்கின் ஒளி வாசல் கதவை முத்தமிடுகிறது. வேண்டா வெறுப்புடன்  கதவைத் திறந்து விட்டு மீண்டும் நாடகத்தில் மூழ்கிப்போகிறாள் செல்வி. …